மக்கள் நலன் காப்பகத்தின் கொரோனா இரண்டாவது அலை உதவி விரிப்பு -Covid-19-help - தேசத்தின் குரல்

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 18, 2021

மக்கள் நலன் காப்பகத்தின் கொரோனா இரண்டாவது அலை உதவி விரிப்பு -Covid-19-help

 

உலகத்தையே தற்போது என்றுமில்லாதவாறு வருடக்கணக்காக ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும்  covid 19(கொரோனா) வைரசின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கில் உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் பல நாடுகள் பொருளாதார பின்னடைவுகளையும்  சந்தித்து இன்றும் இவ் வைரசின் தாக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயற்படும் வேளையில் எமது தாயகமும் இக்கொடிய நோய்த்தாக்கத்திற்கு முகங்கொடுத்து வருகின்றது.

நோய்ப் பரவலை தடுப்பதற்காக நாடு முடக்கப்படுகின்றபொழுது , மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டு  உணவுக்கும், மருத்துவத்திற்கும், நாளாந்த செலவுகளுக்கும்  மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எமது மக்களின்  துயரை , நல்லுள்ளம் படைத்த மக்களின் ஆதரவுடன்  பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்  இயன்றவரை ஆற்றுப்படுத்தி வருகின்றனர்.

இந்தவகையில் "மக்கள் நலன் காப்பகம்" இடர் காப்பு நிதியினூடாக அத்தியாவசிய உணவுப்பொதிகளையும் மருத்துவ உதவியினையும் வழங்கிருகின்றது. இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் மொத்தமாக அறுபத்தேழு இலட்சத்து நாற்பத்தையாயிரத்து முந்நூற்று எழுபத்தைந்து ரூபாய் [67,45375/=] உதவிகள் "கோவிட் 19" இரண்டாவது அலைக்காக மக்கள் நலன் காப்பகத்தால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தொற்று ஏற்பட்ட மக்களின் உயிர் காக்கும் பொருட்டு, முல்லைத்தீவு வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கமைக்க வெண்டிலேட்டர் இயந்திரம்             [ICU Ventilator]  கொள்வனவிற்கான ஒரு பகுதி நிதியாக முப்பத்திரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டதும், ரூபா 1500 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொதிகள்  [ மொத்தமாக முப்பத்திரண்டு இலட்ச்சத்து ஐயாயிரத்து முந்நூற்று எழுபத்தைந்து ரூபா} மக்களுக்கு மாவட்டரீதியாக    வழங்கப்பட்டதும்   குறிப்பிடத்தக்கது.

 மேற்படி நிதிகளை  அனைத்து மக்கள் நலன் காப்பகங்களுக்கும் வாரி வழங்கிய மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எமது அன்புகலந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

 

 

மாவட்டம் சார்பில் உதவி வழங்கிய விபரம்   

மாவட்டம் 

தொகை

அம்பாறை

2,82000/=

 

மட்டக்களப்பு

2,35000/=

 

முல்லைத்தீவு

4,38000/=

வவுனியா

3,41500/=

மன்னார்

5,25000/=

 

கிளிநொச்சி

5,87000/=

 

யாழ்ப்பாணம்

2,00525/=

 

திருகோணமலை

5,51500/=

 

கண்டி

3,74850/=

முல்லைத்தீவு வைத்தியசாலை

32,10000/=

மொத்தத்தொகை

67,45375/=

 

"நன்றி "

 

 

"இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள".

 

 

 

 


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages