மாவீரர்கள் : தமிழினத்தின் கலங்கரை விளக்குகள்- - தேசத்தின் குரல்

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, November 21, 2021

மாவீரர்கள் : தமிழினத்தின் கலங்கரை விளக்குகள்-

 

இது மாவீரர் மாதம்.

ஈழத்தவர் மட்டுமல்ல, உலகத்தமிழர்கள் அனைவரும் ஒரேயுணர்வில் கட்டுண்டு உணர்வால் ஒன்றித்து நெகிழ்ச்சியுறும் காலம்.

தமிழீழத் தேசத்தினதும் தமிழினத்தினதும் விடிவிற்காய் தம்மை ஆகுதியாக்கிய மறவர்களை நினைவுகொள்ளும் மாவீரர்நாள் எம்மினத்தின் எழுச்சிமிகு நாளாகும்.

இயலாதென ஒன்றில்லை, என்பதை வரலாறாக்கிச் சென்றவர்கள் இவர்கள். உலகமே வியக்கும் இமாலய சாதனைகளை எமது போராட்டம் செய்ததென்றால் அதற்கு முழுமுதற்காரணம் எமது மாவீரர்களே.

மாவீரர்கள், தமதினத்துக்காக உயிரைக் கொடுத்ததால் மட்டுமே உயர்ந்தவர்களில்லை. அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையாலும் உயர்ந்தவர்கள். உலகில் உயரொழுக்கத்துக்கும் இறுகிய கட்டுப்பாட்டுக்கும் இலக்கணமான ஓர் இயக்கத்தில் அவர்கள் செயற்பட்டார்கள். வீரச்சாவு அடையும்வரை அந்த நெறிகளுக்குள் நின்று செயற்படுவதென்பதும் அதற்காக அவர்கள் செய்த ஒறுத்தல்களும் போற்றுதற்குரியவை.

போராட்டப்பாதையில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் அதிகம். குறிப்பாக தனது சொந்தக்காலில் நின்று போராடிய ஓர் இயக்கத்தில் இருக்கக்கூடிய வளப்பற்றாக்குறையும் சமாளித்து அதிகரித்த உழைப்பைக் கொண்டே போராட்டம் நகர வேண்டியிருந்தது. சளைக்காமல் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு எமது மாவீரர்கள் போராட்டத்தை நகர்த்தினார்கள்.

எதிரியின் நெஞ்சறையில் இயங்கிய நாயகர்களின் வாழ்வு அதிசயமானது. சுகபோகங்கள் சுற்றியிருக்க, கவனங்கலையாது காரியத்திலே நாட்டமாயிருந்து சாதித்தவர்கள். நடுகற்களோ வீரவணக்க நிகழ்வோ இல்லையென்று தெரிந்தும் சுயத்தை அழித்து ஆகுதியாகியவர்கள். நாற்றங்கள் நடுவில் வாழ்ந்திட்ட முல்லைகள் இவர்கள். சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள் இவர்கள்.

அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்குமான எல்லையை நிறுவியவர்கள் எமது மாவீரர்கள். இந்த மாவீரர்களை ஆண்டுதோறும் தவறாமல் நினைவுகொள்ளும் தமிழினத்துக்கு மிகப்பெரும் வரலாற்றுக்கடமை உள்ளது.

தனியே ஆண்டுக்கொருமுறை மாவீரர்நாளில் உணர்ச்சிப் பிழம்பாகிக் கடந்துபோவதைத் தாண்டி, எமது மாவீரர்களின் கனவின் தொடர்ச்சியைப் பேணுவதும் இலட்சியத்தை அடைய அயராது உழைப்பதும் தமிழர்களின் தலையாய கடமையாகும்.

மாவீரர்கள் நிறுவிச் சென்ற அர்ப்பணிப்பின் ஒரு துளியளவாவது நாமெல்லோரும் செயற்பட்டாலே எமது விடுதலைப் பயணத்தில் பெரும் பாய்ச்சலாக அமையும்.

1 comment:

  1. Most free slots machines present minimal of|no much less than} one kind of bonus. You can trigger a bonus characteristic by landing particular symbols called scatters. Some bonuses are activated at random throughout the primary sport. You should solely play free slot games at authorized, reliable casinos. All of our top-rated casinos are licensed to operate of their respective 점보카지노 state.

    ReplyDelete

Post Bottom Ad

Pages